டிக்டொக் உள்ளிட்ட சீன செயலிகள் குறித்து எச்சரிக்கிறது அமெரிக்கா

Published By: Vishnu

16 Jul, 2020 | 12:37 PM
image

இந்தியா போன்ற நாடுகளில் டிக்டொக்,  உள்ளிட்ட கையடக்கத் தொலைபேசி செயலிகளுக்கு தடை விதிப்பதானது சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பெரும் இழப்பாகும் என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியொருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சீனாவின் டிக்டோக், வீ சட் போன்ற செயலிகளின் பயன்பாடுகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ பிரையன் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முன்னதாகவே இந்த பயன்பாடுகளை தடைசெய்துள்ளது. அதுபோல் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இவற்றை தடைசெய்து விட்டால் சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகப்பெரிய உளவு மற்றும் கண்காணிப்பு சாதனத்தை இழந்து விடும்.

டிக்டொக்கில், முகத்தை அடையாளம் காணும் வசதி உள்ளது. இதன்  மூலம்  தனிப்பட்ட நபரின் தரவுகள் மற்றும் உறவினர்களின் தரவுகள் திருடப்படுகின்றன.

நண்பர்கள் யார், பெற்றோர் யார் என்பதை இந்த டிக்டொக் செலயில் மூலம் சீனா அறிந்து கொள்கின்றது. இதன் மூலம் நபர் ஒருவரின்  உறவுகளை அவர்களால் வரைபடமாக்க முடியும்.

ட்ரம்ப் நிர்வாகம், டிக்டொக்கை மட்டுமல்ல, வீ செட் மற்றும் வேறு சில சீன பயன்பாடுகள் தொட்பிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளது, ஏனென்றால் சீனர்கள் அமெரிக்காவின் தனிப்பட்ட தரவின் தீவிர நுகர்வோர் என்றும் ஓ பிரையன் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47