பண்டாரவளை நகரின் ஒதுக்குப்புறப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எஸ்.எப்.ஜி. 82 ரக அதி சக்திவாய்ந்த கைக்குண்டொன்றை பண்டாரவளைப் பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து, பொலிசார் பண்டாரவளை நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் நீதிபதியின் அனுமதியுடன், குறித்த கைக்குண்டை தியத்தலாவை குண்டுகள் செயலிழக்கும் இராணுவப் பிரிவினரால் செயலிழக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த குண்டு தொடர்பான விசாரணைகளை பண்டாரவளைப் பொலிசார் மேற்கொண்டுள்ள நிலையில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

பண்டாரவளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே பொலிசார் விரைந்து, மேற்படி கைக்குண்டுப் பொதியை மீட்டமை குறிப்பிடத்தக்கது.