நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடப்புஸ்ஸல்லாவை மல்பரோ தோட்ட விவசாய காணியில் 4 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவரை நுவரெலியா பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டை சோதனை செய்த போது கேரள கஞ்சா பொதி செய்யப்பட்ட பக்கெட்டுகள் இருந்ததாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக குற்ற தடுப்பு பிரிவினர் உடப்புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சுற்றிவலைப்பை நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் பணிப்புரையின் படி நுவரெலியா பொலிஸ் பிரிவின் குற்ற தடுப்பு பிரிவின் அதிகாரியுடனான பொலிஸார் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM