பாராளுமன்ற தேர்தல் ; சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகள் விரைவில் வர்த்தமானியில்

By Vishnu

16 Jul, 2020 | 10:14 AM
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகள் அடுத்த இரு நாட்களுக்குள் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி தெரிவித்தார்.

தேர்தலின் போது பின்பற்றப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டு 5 வாரங்கள் கடந்துள்ளன.

எனினும் அவை இன்னும் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்படாமையால் பிரசார கூட்டங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் பின்பற்றப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கவலை தெரிவித்தார்.

இந் நிலையிலேயே மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right