வடக்கு சிரியாவின் அல்-பாப் பிராந்தியத்தில் புதன்கிழமை பொதுமக்கள் குடியேற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டு வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலானது ரஷ்ய போர் விமானத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரிய இராணுவ எதிர்க்கட்சி குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளது.

தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளிலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பல அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், சிவில் பாதுகாப்பு குழுக்கள் இடிபாடுகளில் தேடல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்துமிருந்தனர்.

துருக்கி மற்றும் சிரிய இராணுவத்தினர் 2017 பெப்ரவரி மாதம் ஐஸ்.ஐஸ். பயங்கரவாத குழுவிலிருந்து அல்-பாப்பை விடுவித்தன.

photo Credit ; twitter