போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த நபர் மஸ்கட் ஊடாக இத்தாலி நாட்டிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர், நீர்கொழும்பைச் சேர்ந்த தரகர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலி விசா தயாரித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.