பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னங்குளத்தில் மூழ்கிய நபரொருவரின் சடலம் இன்று (06) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (05) மாலை குளத்திற்கு குளிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

நபரை தேடும் பணியை மேற்கொண்ட கடற்படையினர் இன்று காலை குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பெரியபளை பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை திருச்செல்வம் (50) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.