சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் (எஸ்.எஸ்.சி) கிரிக்கெட் குழுவின் தலைவராக  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற  சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போதே மகேல ஜெயவர்தனவை தலைவராக நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்  (எஸ்.எஸ்.சி.) கிரிக்கெட் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பு மகேல ஜெயவர்தனாவிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.