நாட்டின் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சை எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதியிலிருந்து இடம்பெறுமென கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கட்சி தலைமையகத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இந்த முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அதிகமாக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளதாக இதன்போது அவர் தெரிவித்தார்.