யாழ் மாவட்ட வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

By T Yuwaraj

15 Jul, 2020 | 04:49 PM
image

யாழ் தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்பபுலிகள் மக்கள் பேரவை சார்பாக போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் இன்றையதினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் வயது.58 என்ற நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மாவீரர் குடும்பத்தை சேர்ந்த இவர் இனப்பற்றாளராக திகழந்து பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்திருந்ததுடன், இம்முறை இடம்பெறவிருந்த பாராளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேட்சைகுழு 14 இல் இலக்கம் ஒன்றில் போட்டியிடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலிற்கான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே அவர் இன்றையதினம் காலை அவரது வீட்டில் மரடைப்பினால் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right