தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலே தான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வலைப்பாட்டு பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இந்த நாட்டிலே விடுதலைக்காக 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள்.
தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த மண்ணிலே எமது உரிமைகளை பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம் போராடியும் வருகிறோம்.
இவ்வாறாக நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன் செயற்படுகிறது.
வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசு செயற்படுகிறது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
இப் பிரச்சாரக் கூட்டத்தில் வடமகாண முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி, கரைச்சி தவிசாளர்கள் கட்சியின் செயற்ப்பாட்டாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM