கொரோனா தொற்று பரவலின் 2 ஆவது அலை குறித்து இராணுவத்தளபதியின் கருத்து

Published By: Vishnu

15 Jul, 2020 | 01:36 PM
image

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்ப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புட்டவர்கள் உள்ளிட்ட அனைவரதும் பி.சி.ஆர். பரிசோதனைகள் பூரத்தி செய்யப்பட்டடிருப்பதாக இராணுவ தளபதியும் கொவிட் தொற்று பரவலைத் தடுப்பதற்கான மத்திய செயற்பாட்டு நிலையத்தின் பொறுப்பாளருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் சம்பந்தப்பட்ட குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இவர்கள் தொடர்பான பி.சி.ஆர். பரிசேதைனையை வெளியிடுவதற்கான நடவடிககை நேற்று முதல் ஆரம்பமானது.

இதேவேளை சில நகரங்களில் இங்கும் அங்கும் தொற்று நோயாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் சில தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அது தொடர்பாக பிரதேச சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்படும். 

இவர்கள் இந்த நோயாளிகளுடன் தொடர்புபட்ட இரண்டாம் நிலை நோயாளர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவர். இதனால் அந்த பகுதியில் தொற்று நோயாளர் இருப்பதாக சிலர் தெரிவிப்பதே இந்த நிலைக்கு காரணமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை நிலை இல்லை. இரண்டாம் அலையை இதுவரையில் பிரகடனப்படுத்தக்கூடிய நிலை நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பனும் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்தார்.

பொது தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிடாது என்றும் அவர் கூறினார். இருப்பினும் பொலிசார் கோரிக்கை விடுக்கும் பட்டத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மாத்திரம் இராணுவம் பங்களிப்பு செய்யும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47