உள்நாட்டு ஒலிபரப்பு சேவையில் முன்னோடியான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய செயற்பாடு ஒன்றிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில்  ஸ்டூடியோ 6 இசை நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்குவதற்காக ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் இசைத்துறையின் பொற்காலத்தை மையமாகக் கொண்டு இசைத்துறையின் தேவைக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கிலும் அதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத்தரும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புராதன அரங்கமாக வரலாற்று சிறப்பு மிக்க ஸ்டூடியோ 6 ஏராளமாக பாடல்களை பதிவு செய்வதற்கு வசதிகளை பெற்றுத்தந்துள்ளதுடன் புலமையான பாடலாசிரியர்கள் முதல் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் வரையில் அனைவரது படைப்புகளிலும் இவ்வரங்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சித் தொகுப்பின் முதல் அங்கமாக பிரபல பாடலாசிரியர் குலரத்ன ஆரியவங்ச அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒரு நிகழ்ச்சி நடாத்தப்பட்டதோடு இந்நிகழ்வுக்கு ரோஹன வீரசிங்ஹ, திலீப அபேசேகர, டீ.எம் ஜயரத்ன, பந்துல நானாயக்காரவசம் மற்றும் சுனில் சரத் பெரேரா ஆகிய கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இசையை ரசிக்கும் அனைத்து இலங்கையர்களும் ஞாயிறுதோறும் மாலை 5.00 மணிக்கு 89.6 அல்லது 89.8 என்ற அலைவரிசையின் ஊடாக City FM  ஒலிபரப்பு சேவையின் மூலம் அல்லது ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தின் மூலம் வீடியோவை ரசித்திட அல்லது இசையை அனுபவித்திட முடியும்.

மேலதிக விபரங்களுக்கு - அனுஷா திசாநாயக்க - (077 848 4346)