எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க  தகவல் திணைக்களம் இன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

கோவிட் -19 நோயாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்புகள், பி.சி.ஆர் சோதனைகளுக்கு தொடர்புகளை உட்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.