சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் 

Published By: Digital Desk 4

15 Jul, 2020 | 11:32 AM
image

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு இந்த ஆண்டிற்கான வோன் கார்மான் விருது வழங்கப்பட இருக்கிறது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களுக்கு, விண்வெளித் துறையில் உயர்ந்த  விருதாக போற்றப்படும் 'வோன் கார்மான்' விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.  

2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவராக செயல்பட்டு வரும் வானியல் விஞ்ஞானி சிவன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் சந்திராயன்-2 ஆகிய திட்டப் பணிகளில் முழுமையான பங்களிப்பை வழங்கியவர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் விழாவில் திரு சிவன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் சர்வதேச வானியல் அகாடமி தெரிவித்திருக்கிறது.

வோன் கார்மான் விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்த வானியல் விஞ்ஞானி சிவனுக்கு, பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50
news-image

தலைக்கு மேலே 16 போர் விமானங்கள்...

2025-03-18 17:06:54
news-image

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் இந்திய...

2025-03-18 16:47:12
news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45