இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்ககெட் சபை நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது.

ஊக்கமருந்து பாவித்ததாக குசல் ஜனித் பெரேரா மீது சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சோதனையின் இறுதியில் குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பாவிக்காதமை உறுதியானது. 

இதையடுத்து இலங்கை கிரிக்கெட் சபை குசல்ஜனித் பெரேராவுக்கு இடம்பெற்ற அநீதிக்கு நஷ்டஈடு வழங்குமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் சபை குசல் ஜனித் பெரேராவுக்கு நஷ்டஈடு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.