பெல்ஜியம் மார்ச் மாதத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் முதன்முறையாக 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The country, which has reined in the coronavirus after becoming the worst-hit mid-sized country in the world, reported no new coronavirus-related deaths in 24 hours for the first time since March 10. Above, hospital staff pay tribute after a staff member who died from COVID-19 in Brussels

கொரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கிய பெல்ஜியத்தில்  மார்ச் 10 ஆம் திகதிக்கு பின் முதல் முறையாக நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

எனினும் நேற்றைய தினம் 05 இறப்புகள் பதிவாகியுள்ளதுடன், 94 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏப்ரலில்  தினசரி இறப்பு எண்ணிக்கை 343 ஆக இருந்து வந்துள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக  அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

As in many European countries that were hard hit by the pandemic in March and April, Belgium sharply reduced infections by imposing a lockdown, which is now being lifted. Above, customers wear a face mask when shopping, in Brussels, Belgium

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்று காரணமாக  கடுமையாக பாதிக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பெல்ஜியமும் நாட்டை முடக்கியது.

தற்போது கொரோனா தொற்றுநோய்களைக் குறைத்து வருவதையடுத்து கட்டம் கட்டமாக நாட்டை வழமைக்கு திருப்பும் பணியை ஆரம்பித்துள்ளது. 

அதேவேளை, பெல்ஜியத்தில் 62,781 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 9,787 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.