களுத்துறை - பயகலவிலுள்ள கடற்பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் சடலங்கள் இன்று (14.07.2020) காலை மக்கொன பகுதியில் உள்ள கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 13 மற்றும் 15 வயதுடையவர்கள் இரு சகோதரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.