விமர்சனங்களுக்கு பதிலளித்து பொது எதிரியை பலப்படுத்த நாம் தயாரில்லை..!: ரோஹண லக்ஷ்மன் பியதாச

Published By: J.G.Stephan

14 Jul, 2020 | 04:30 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து பொது எதிரியை பலப்படுத்த நாங்கள் தயார் இல்லை. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் அவதூறுகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ராேஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு சிறிலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பெயரில் மொட்டு சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம். அத்துடன் எமது கட்சிக்கு வேட்புமனுவில் போதுமான சந்தர்ப்பங்கள் கிடைக்காத மூன்று மாவட்டங்களில் நாங்கள் எமது கட்சியின் கை சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றோம். எவ்வாறு இருந்தாலும் கொள்கையில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம்.

என்றாலும் கடந்த காலங்களில் தேர்தல் பிரசார மேடைகளில் எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் அவரின் வெற்றியை தடுக்கும் வகையிலும் எமது அணியில் போட்டியிடும் ஒருசிலர் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது தேர்தல் சட்டத்தையும் மீறுகின்ற செயலாகும். இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடு செய்திருக்கின்றோம். 

அத்துடன் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலின்போதும் உள்நாட்டு வெளிநாட்டு சதித்திட்டங்கள் மூலம் எம்மை தோல்வியடையச் செய்ததாகவும் அதேபோன்றதொரு சதித்திட்டம் வேறு கோணங்களில் தற்போதும் இம்பெற்று வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அதே அணியில் இருந்து தெரிவிக்கப்படும் அவதூறுகள் எமது கூட்டணியை குழப்புவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதியாகவும் இருக்கலாம். அதனால் எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து, எமது பொது எதிரியை பலப்படுத்தவோ எமக்கு எதிராக ஆயுதம் ஏந்த, அவர்களுக்கு ஆயுதம் வழங்கவோ நாங்கள் தயாரில்லை எனடறார்.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01