கபாலி பாடல் தலைப்பை கைப்பற்றிய விக்ரம் பிரபு

By Robert

06 Jul, 2016 | 10:35 AM
image

கபாலி’ படத்தின் பாடல் தலைப்பு ஒன்றை விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார். அது என்ன பாடல்? அது என்ன தலைப்பு? என்பதை கீழே பார்ப்போம்...

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் டீசரும் இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில், கபாலி படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார்.

இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘நெருப்புடா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராக நடிக்கிறாராம். அதனால், இந்த படத்துக்கு ‘நெருப்புடா’ என்ற தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் அந்த தலைப்புக்கான அனுமதி கேட்டுள்ளனர்.

கலைப்புலி எஸ்.தாணு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அந்த தலைப்பை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். இந்த படத்தின் பெயர் அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. படத்தின் அறிமுக விழா மட்டுமில்லாது, விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்பட்டது. 

அதன்படி, விக்ரம் பிரபுவின் புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தை தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். ‘நெருப்புடா’ படத்தின் தலைப்பை கலைப்புலி எஸ்.தாணு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த விழாவில் விக்ரம் பிரபுவின் அப்பாவும், நடிகருமான பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right