ராகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்தனர்.

கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் மீது கொரோனா தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.