கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் நடிப்பில் தயாராகி வரும் 'ஜோஷ்வா' படத்தின் முதல் பாடல் இம்மாதம் 16ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகில் காதல் கதைகளையும், எக்சன், திரில்லர் கதைகளையும் 'ஸ்டைலிஷான மேக்கிங்' மூலம் ரசிகர்களை வியக்க வைப்பவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். 

இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ஜோஷ்வா'. இப்படத்தில் பப்பி, கோமாளி ஆகிய படங்களில் நடித்த நடிகர் வருண் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஹீ என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். 

இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் இது.

இப்படத்தில் இடம்பெறும் 'நான் உன் ஜோஷ்வா...' எனத் தொடங்கும் பாடல் இம்மாதம் 16ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் இப்படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைக்கும் பாணி குறித்த முப்பது விநாடிகள் இடம்பெறும் வீடியோவும் வெளியாகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.