ஹெரொயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தேரர் உட்பட மூவரை அனுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியினூடாக ஹெரொயின் கொண்டுசெல்லப்பட்ட போது நொச்சிகம பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.32 கிராம் ஹெரொயின் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களில் தேரர் கல்கமுவ பகுதியில் உள்ள விகாரையில் உள்ளவரெனவும், ஏனைய சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் பமுனுகம பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சந்தேக நபர்களை தம்புத்தேகம நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.