அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன ஹொலிவூட் நட்சத்திரம் நயா ரிவேராவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரபல ஹொலிவூட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான நயா நிவேரா, தி ரோயல் பேமிலி என்ற புகழ்பெற்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . அதன் பிறகு, இளம் நடிகையாக க்ளீ தொடரில் புகழ்பெற்றர். பல நேரலை நிகழ்ச்சியில் கலக்கியவர். 2011 ஆம் ஆண்டு கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை 33 வயதான நயா ரிவேரா கலிபோர்னியாவில் உள்ள பீரு ஏரியில் தன் 4 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நிலையில், காணாமல் போனார். அவரது மகன் மட்டும் படகில் தனியாக இருந்துள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தன் தாய் தண்ணீரில் குதித்து நீந்தியதாகவும் அதன் பிறகு படகுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து ஏரி நிர்வாகம் மீட்புக்குழுவுக்கு தகவல் கொடுத்தது. நயாவின் உடலை தேடும் பணியில் 4 நவீன ஹெலிகொப்டர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் நயா ரிவேராவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலைசெய்யபட்டமைக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.