இன்றுடன் ஒரு வருடம்!

Published By: Vishnu

14 Jul, 2020 | 10:02 AM
image

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  நியூஸிலாந்து அணியை வீழ்ந்தி ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை முத்தமிட்ட நாள் இன்று ஆகும். 

இதனால் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்று சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாவது அணியாக இங்கிலாந்து பதிவானது.

2019 ஜூலை 14 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றியை தட்டிப் பறித்தது இங்கிலாந்து. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை எடுத்தது.

ஹென்றி நிக்கோல்ஸ் (55), டொம் லெதம் (47) மற்றும் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (30) ஆகியோரின் மதிப்புமிக்க பங்களிப்பு இந்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தது.

இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் (3/37) மற்றும் லியாம் பிளங்கெட் (3/42) ஆகியோரின் பந்து வீச்சுகளும் நியூஸிலாந்தின் அதிரடியான துடுப்பாட்டத்துக்கு கடிவாளம் இட்டிருந்தது. 

242 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்களை பெற்று போட்டியை சமன் செய்தது.

இங்கிலாந்து அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கைக்கு பென் ஸ்டோக்ஸ் (84), ஜோஸ் பட்லர் (59), ஆகியோர் மிகப்பெரிய பங்காற்றியிருந்தனர். நியூஸிலாந்தின் உலகக் கிண்ணத்தை கலைக்க பட்லர் மற்றும் பென் ஸ்டோக்கின் ஜோடியும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும். அவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக 110 ஓட்டங்களை சேர்த்திருந்தனர்.

இதனால் போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்ததுடன் சூப்பர் ஓவர் நிலை உருவானது. 

சூப்பர் ஓவரில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட பட்லர் மற்றும் பென்ஸ்டோக், டிரென்ட் போல்டின் பந்து வீச்சினை எதிர்கொண்டு அதிரடியான ஆட்டத்தினால் 15 ஓட்டங்களை எடுத்தது. 

நியூஸிலாந்து அணி சார்பில் மார்ட்டின் குப்டில் மற்றும் ஜிம்மி நீஷாம் ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சினை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடினர். 

அவர்கள் 5 பந்துகளில் 14 ஓட்டங்களை எடுத்தனர். இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலிருந்தபோது நியூஸிலாந்து அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று இரண்டாவது ஓட்டத்தை பெற முற்படுகையில் ரன் அவுட் முறையில் குப்டில் ஆட்டமிழந்தார். 

இரு அணியினரின் ஓட்ட எண்ணிக்கை சூப்பர் ஓவரில் சமமாக இருக்க, பவுண்டரிகளின் (நியூசிலாந்து 17 பவுண்டரி, இங்கிலாந்து 22 பவுண்டரி) அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவானது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியதுடன், கிரிக்கெட் அரங்கிலும் பேசு பொருளாகியது. அது மாத்திரமன்றி பின்னர் போட்டிகளில் விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவும் இது வழிவகுத்தது.

காணொளிக்கு - இன்றுடன் ஒரு வருடம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49