இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டிசில்வா அட்மிரலாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் தரமுயர்த்தப்பட்டுள்ளார். 

2019 ஜனவரி முதலாம் திகதி இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, இலங்கை கடற்படையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நாளை ஓய்வு பெறவுள்ளார்.

வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பாரம்பரிய சந்திப்பொன்றை நேற்றைய தினம் மேற்கொண்டிருந்தார். 

பிரதமர் கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு உரையாடி, கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலம் வாழ்த்தினார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமரும் இடையே நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.