கொரோனா பீதி : யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி  வளாகம் முடக்கம் 

13 Jul, 2020 | 11:16 PM
image

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர்  வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கையை சேர்ந்த மாணவியின் சகோதரன் ஒருவர்  கந்தக்காடு கொரோனா வைத்தியசாலைக்கு பணி நிமிர்த்தம் சென்று வந்ததன் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை  கண்டயறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று  குறித்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அறிவியல்நகர் வளாகம் முடக்கப்பட்டுள்ளது. 

எவரும் வெளியேறாது தடுக்கப்பட்டுள்ளனர். மாணவியிடம் பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது.

வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் இன்று திங்கட்கிழமை  மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உள்பட அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமைபுரியும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு இராணுவ சிப்பாய் ஆவார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கம்பஹாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு உத்தியோக பூர்வமாகத் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தொற்றுக்குள்ளான இராணுவச் சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயில்வதனால், கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51