பொருளாதார அபிவிருத்திக்கு  வலுவான பாராளுமன்றம் தேவை  - ஜி. எல். பீறிஸ்   

13 Jul, 2020 | 10:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

  பொது மக்களின் சுகாதார  பாதுகாப்புக்கு அரசாங்கம் எந்நிலையிலும் முக்கியத்தவம்   கொடுக்கும்.  நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவை  காணப்படுகின்றது.  கொவிட்- 19  வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளதாரத்தை மீள்  கட்டியெழுப்ப  வேண்டுமாயின் பெரும்பான்மையுடன் பலத்துடன்  பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம்  தோற்றம்  பெற  வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ்  தாக்கத்தை  கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து  முறையான நவடிக்கைகளை முன்னெடுத்து  வருகிறது. பொது மக்களின்  சுகாதார  பாதுகாப்பினை  கருத்திற் கொண்டே   ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்  மூன்று  நாட்களுக்கு  இரத்து செய்யப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெரும்பாலான மக்கள்  கலந்துக் கொள்வது இயல்பான  விடயம்.    ஆகவே   சுகாதார  பாதுகாப்பு  அறிவுறுத்தல்களை முறையாக  செயற்படுத்த வேண்டும்  என்பதற்காகவே   பிரசாரக் கூட்டங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம்  சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக  

செயற்படுத்தும்.

 கொவிட்- 19   வைரஸ் தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை  மீள் கட்டியெழுப்ப வேண்டுமாயின்  பலமான அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவுடன் தோற்றம் பெற வேண்டும். என்பதன் காரணமாகவே நெருக்கடியான  நிலையில் பொதுத்தேர்தல்  இடம்பெறவுள்ளது. ஆகவே  மக்கள் நிலைமையினை புரிந்துக்   கொள்ள வேண்டும்.

 பல அடிப்படை பிரச்சினைகளுக்கு  புதிய  அரசாங்கத்தில் தீர்வு காண  வேண்டும். அரசியலமைப்பின் 17, 19ஆகிய   திருத்தங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீள்பரிசீலளை செய்யப்படுவதுடன்,   தேர்தல் முறைமையும் திருத்தம் செய்யப்பட வேண்டும்.  விருப்பு வாக்கு  முறைமை அனைத்து கட்சிகளிலும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.   புதிய  தேர்தல் திருத்த முறைமையும் அறிமுகப்படுத்த  வேண்டும்.  இவற்றை செயற்படுத்த பொதுஜன பெரமுன  பாராளுமன்றில மூன்றில் இரண்டு ஆசனங்களை  கைப்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09