கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஊடாக ஆரம்பமான கொரோனா தொற்று சங்கிலி தொடர் காரணமாக, இராஜாங்கனை பிதேசத்தில் ஒழுங்கை 1, ஒழுங்கை 3, ஒழுங்கை 5, ஆகிய மூன்று கிராமசேவை பிரிவுகளில் மக்கள் நடமாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Sri Lanka contemplating private-sector tests for COVID19 | EconomyNext

இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

வெலிக்கடை மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையங்களின் ஊடாக ஆரம்பமான கொரோனா தொற்று சங்கிலி தொடரில் தொடர்புடைய அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி நோயாளிகளை இனங்காணுதல் உள்ளிட்ட  அணைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் தற்போது விசேடகவனம் செலுத்தப்பட வேண்டிய இடமாக  இராஜாங்கனை பிரதேசம் உள்ளது.

இங்கு தொற்றுக்குள்ளான நபர் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டதன் காரணமாக இப் பிரதேசத்தின் கிராம வாசிகளினதும் ஏனையோரினதும் நன்மை கருதி  ஒழுங்கை 1, ஒழுங்கை 3, ஒழுங்கை 5, ஆகிய மூன்ற கிராமசேவை பிரிவுகளில் மக்கள் நடமாட்டத்திற்கு  முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இராஜாங்கனை குறித்து பார்க்கும் போது முதலாவது தொற்றாளரின் உறவினரின் மரணவீட்டில் சுகாதார நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்குமானால் இவ்வாறு அதிகமான பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்காது.

கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்றபடுத்தி வருகின்றது.  இந்நிலையில் நாம் கடந்த மூன்று மாதங்களாக ஆலோசித்து வழங்கிய சுகாதார நடை முறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நாம் இதன் மூலம்  மக்களுக்கு தெரிக்க விரும்கின்றோம்.

கந்தக்காடு கொரோனா தொற்று சங்கிலி தொடர் காரணமாக இலங்கை பூராகவும் இவ் வைரஸ் தொற்று பரவவில்லை, இவ் தொற்று பிரதானமாக ராஜாங்கனை, வெலிகந்தை ஆகிய இடங்களிலேயே காணப்படுகின்றது.

எனினும் இந் நிலைமை வெவ்வேறு விதமாக பிரசாரம் செய்யப்படுகின்றது. மற்றும் வெவ்வேறு பிரதேசங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஆனால் அதில் உண்மையில்லை. ஏதாவது ஒரு பகுதியில் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டால் அது தொடர்பில் நாம் மக்களுக்கு அறியத் தருவோம்.

கந்தக்காடு மற்றும் வெலிக்கடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போது மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய இடங்களுடன் தொடர்புடைய ஆலோசகர்கள்,  மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்கள் விடுதலையான சிறைச்சைாலை கைதிகள் உள்ளிட்டவர்களை மீண்டும் குறித்த இடங்களுக்கு அழைப்பதன் மூலமோ அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும், வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துதல் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் மட்டுமே இதன் மூலம் அவர்களுக்கு தொற்று உள்ளதென யாரும் பீதியடையத் தேவையில்லை என தெரிவித்தார்.