கொழும்பு - கோட்டை, காலி முகத்திடலில் ரஷ்ய நாட்டு யுவதி ஒருவரை பாலியல் இம்சைகளுக்கு உட்படுத்தி அவரது  இலங்கை நண்பரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி ஞாயிறன்று இரவு 11 மணியளவில், காலி முகத்திடலுக்கு ரஷ்ய யுவதியும் அவரது இலங்கை நண்பர்களும் சென்றுள்ளனர்.

இதன்போதே குறித்த தாக்குதல், பாலியல் இம்சை இடம்பெற்றதாக கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய,  குறித்த ரஷ்ய யுவதி தனது தொலைபேசியில் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தை மையப்படுத்தி பொலிசார் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு 2 கொம்பனித் தெரு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். மேலும் சிலரைத் தேடி வருவதாக பொலிஸார்  கூறுகின்றனர்.

இந் நிலையிலேயே, கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் இன்று (13.07.2020) வரை விளக்கமறநியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.