வயது போன அரசியல் எனக்கு சரிவராது. ஐந்து வருடங்கள் மட்டுமே அரசியலில் இருப்பேன். அதன் பின்னர் இளைய தலைமுறையிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு ஆலோசகராக செயற்படுவேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நல்லூரில் உள்ள தனியார் விடுதியில் நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டு  உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கூட்டமைப்பின் கைகளில் இருந்த வடக்கு மாகாணசபை தனக்கு இருந்த அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்தவில்லை.

த.தே.கூ தலைவர் சம்பந்தன்  20 ஆசனங்களை தாருங்கள் என்பதைப்போல் நாங்கள் கேட்கவில்லை. 5 ஆசனங்களை கைப்பற்றும் பட்சத்தில் தமிழர்களின் அரசியல் பிரச்சினை, அபிவிருத்தி, அன்றாட பிரச்சினைகளை தீர்து வைப்பேன்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு வரும் என்று காத்திருக்க முடியாது. அரசாங்கத்துடன் இனைந்து நாங்கள் தமிழர்களாக கௌரவமாக வாழ்வதற்கான தீர்வை பெற முயற்சிக்க வேண்டும், என்றார்.