ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் ; சிவசக்தி ஆனந்தன்

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 06:07 PM
image

அரசு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சுதந்திரமாக செயற்பட ஆவனம் செய்ய வேண்டும் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டை கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் தலைமையை இந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யவுள்ளனர்.  கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தனர், 

தமிழ் மக்களுக்கு அதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அடுத்து யுத்தத்தினால் இழந்து போன எங்கள் பிரதேசத்தினை மீள் கட்டியெழுப்ப பாரியளவில் நிதியுதவி தேவைப்படுகின்றது. 

அத்துடன் கடந்த 30 வருடமாக தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாமல் உள்ள அரசியல் ரீதியான பிரச்சனையும் தீர்க்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த முக்கிய பிரச்சனைகளுக்காகவே கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் நீதியை பெற்றுகொடுக்க வேண்டியவர்கள் அரசாங்கத்திற்கு விலைபோய் முண்டு கொடுத்த நிலைமைதான் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஆகவே இந்த பாராளுமன்ற தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் தமக்கு உறுதியான தலைமைத்துவம் தேவை என்பதனை உணர்ந்துள்ளனர். அதற்கான அரசியல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த இடைவெளியை நிரப்புவதற்காக இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவினை வழங்க வேண்டும்.

அத்துடன் ஊடக சுதந்திரம் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றது. அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தரினால் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டு அவருடைய புகைப்பட கருவியும் பறிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் ஊடகவியலாளர்களையும் ஊடங்களையும் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது எனவும் தெரிவித்தார்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04