வவுனியா வைரவபுளியங்குளம் செல்லும் பிரதான வீதியிலுள்ள பிரதான ரயில் கடவை சமிக்ஞையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதியால் பயணிப்பவர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருவதுடன் இப்பகுதியால் செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா ரயில்க்கடவையிலுள்ள சமிக்ஞையின் செயற்பாடு ஒரு பக்க வாசல் தடை செயற்படும்போது மறு பக்க வாசல் தடை செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை. 

இரண்டும் ஒரே மாதிரியாக செயற்படும் போது மக்களின் பாதுகாப்பு கருத்திற்கொள்ளப்படும் ஒரு பக்கம் மூடியும், மறுப்பகம் திறக்கப்பட்டும் காணப்படும்போது ரயில்க்கடவையை பொதுமக்கள் கடக்க முற்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதனைத்தடுக்கவும் முடியாமல் ரயிலின் வருகையை எதிர்பார்த்து ரயில் காப்பாளர் கடமை செய்து வருகின்றார். 

மின்சாரத்தில் செயற்பாடும் ரயில்க் கடவையின் சமிக்ஞை சில வேளைகளில் செயற்படுவதுடன் சில வேளைகளில் செயற்படுவதில்லை. அவ்வீதியை கடந்து செல்பவர்களுக்கு விபத்தின் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது. 

இதனை உடனடியாக சீர் செய்து மக்கள் அச்சமின்றி ரயில்க்கடவையை கடந்து செல்வதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.