கந்தளாயில் இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Digital Desk 3

13 Jul, 2020 | 02:52 PM
image

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம்  அறிவித்துள்ளது.

குறித்த இராணுவ வீரர் கந்தகாடு இராணுவ நிலையத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியே நிலையிலே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார வைத்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய யு.கே சமிந்த குமார எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ வீரர் விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்ற நிலையிலே காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலே, கொரோனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அலுவலகம் அறிவித்ததுள்ளதுடன் இராணுவ வீரர் தொடர்புகளை பேணிய, அவர் சென்ற இடங்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00