தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவருமான நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா உயிரிழந்துவிட்டதாக ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ஏ.என்.சி) செய்தித் தொடர்பாளர் திங்களன்று அறிவித்தார்.

டென்மார்க்கிற்கான தென்னாபிரிக்காவின் தூதராக பணியாற்றி வந்த 59 வயதான ஜிண்ட்ஸி, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது மரணத்திற்கான காரணங்கள் உறுதியாக வெளிவரவில்லை.