கொரோனா தொற்று காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

மாலைதீவில் பல சுற்றுலா ஹோட்டல்களில் தொழில்புரிந்தவர்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். 

இலங்கை எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். - 4102 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே அவர்கள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.  

விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டது.