(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில் பிற  கட்சிகளின் ஆதரவுடன்  அரசாங்கத்தை  அமைக்க  வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. தனித்து நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  நிச்சயம் கிடைக்கும்.      நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அரசாங்கத்தை அமைத்தால், கடந்த அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும்  தோற்றம் பெறும் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

  நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில்   குறிப்பிடுகையில் அவர்  மேற்கண்டவா று குறிப்பிட்டார்.

  மேலும், கொரோனா வைரஸ்  பரலலை குறிப்பிட்டுக் கொண்டு, மக்களின் அன்றாட செயற்பாடுகளை  முடக்க முடியாது.  கடந்த மூன்று  மாத காலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த  ஊரடங்கு  சட்டத்தின்  காரணமாக தேசிய பொருளதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.  மறுபுறம் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள். மாணவர்களின்  கல்வி நடவடிக்கைகளும் பாரிய  சவால்களை கண்டுள்ளது. இவ்வாறான  நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.

     மக்கள்  கொவிட் -19  வைரஸ் தாக்கத்துடன் வாழ பழகிக் கொண்டார்கள். வைரஸ் தொற்று  சமூக  பரவாமல் இருப்பதற்கான பலமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான   நிலையில் தற்போது புதிதாக  வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.      சமூக தொற்று  தீவிரமடையாமல்  இருப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

   புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுனவிற்கு பிறிதொரு கட்சியின் ஆதரவு அவசியம் என  எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.  எக்கட்சிகளின் ஆதரவு இல்லாமல்  பொதுஜன பெரமுன  பாராளுமன்றத்தில் தனித்து  நிலையான அரசாங்கத்தை அமைக்கும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  நிச்சயம் கிடைக்கும்.

  பாராளுமன்றத்தில் பிறிதொரு கட்சியின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கும் போது அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும். நல்லாட்சி அரசாங்கம்  நிபந்தனைகளின் ஊடாகவே  ஸ்தாபிக்கப்பட்டது. ஒவ்வொரு தரப்பினரது மாறுப்பட்ட கொள்கைகளுடன்  இணைந்து அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. ஆகவே  நிபந்தனைகளற்ற அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எமது  இலக்கு.

 அத்தோடு, ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவில்  தமிழ்  முஸ்லிம் சமூகத்தினர் போட்டியிடுகிறார்கள். தேசிய பட்டியலிலும் இரு தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான  புதிய அரசாங்கத்தில் தமிழ் , முஸ்லிம்  சமூகத்தினர்கள் உள்ளடங்குவார்கள் என்றார்.