அணியில் இடம் கிடைப்பதற்காக எந்த இடத்திலும் களமிறங்கவுள்ள இந்திய வீரர்

By T. Saranya

13 Jul, 2020 | 01:44 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், எந்தவொரு துடுப்பாட்ட வரிசையிலும் களமிறங்கி விளையாடத் தயார் என இந்திய கிரிக்கெட் வீரரான அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராகவுள்ள அஜிங்யா ரஹானே இணையத்தளமொன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச ஒரு நாள் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இதைத்தான் எனது உள்ளுணர்வும் சொல்கிறது. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை தொடக்க இடத்திலோ, 4 ஆவது இடத்திலோ அல்லது எந்த இடத்திலோ துடுப்பெடுத்தாட கூறினாலும் அதற்கு தயாராக இருக்கிறேன்.

ஆனால் வாய்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது. மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட மனரீதியாக தயாராக உள்ளேன். திறமை மீது நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது முக்கியம்’’ என்றார். இதுவரை 90 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான ரஹானே கடைசியாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right