இலங்கைக்கும் மற்றும் சிங்கப்பூருக்கிடையில் கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பரிசீலனை பணிகளானது இன்னும் முழுமை பெறவில்லை என இன்று நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு குழு இன்னும் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து வருவதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேர இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

நாட்டில் அண்மைய சூழ்நிலைகள் காரணமாக மறு ஆய்வு முன்னேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டிய சட்டமா மா அதிபர் மீளாய்வினை நிறைவு செய்த அதிக நேரம் ஒதுக்குமாறும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

அதற்கிணங்க அது தொடர்பான மேலதிக விசாரணையை நவம்பர் 3 ஆம் திகதி வரை உயர் நீதமன்றம் ஒத்தி வைத்தது.

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கை மற்றும் சிங்கப்பூர் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.