மஸ்கெலியா பொலிஸாரால் இன்று 13 ஆம் திகதியன்று காலை நகருக்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பணிப்புரை வழங்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாதோரின் பெயர் பட்டியல் பெறப்பட்டதுடன் எதிர்வரும் நாட்களில் நகருக்கு வருகை தரும் போது முகக்கவசம் அணிய தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

இந்நடவடிக்கையை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் படி உதவி பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸார்  முன்னெடுத்து வந்தமை குறிப்பிட்டத்தக்கது.