தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சி - அஜித் ரோகண 

Published By: Digital Desk 4

13 Jul, 2020 | 12:53 PM
image

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சிப்பதாக கொரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெடர்ந்து தெரிவிக்கையில்,

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க இன்றைய தினம் நாங்கள் வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளோம் நானும் பொலிஸ் பேச்சாளரும்  வடக்கிற்கு விஜயத்தினை மேற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது  தொடர்பில் ஆராய்வதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறோம்.அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம்.

இன்று வடக்கு மாகாணத்திலுள்ள  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து  தேர்தல்  தொடர்பாக  விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தவுள்ளோம் அதில் பல்வேறு விடயங்கள்  பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

எமக்கு தற்போது உள்ள ஒரு  பிரச்சனை கொவிட் 19  வைரஸ் பிரச்சினை ஆகும் இது நாடளாவிய ரீதியில் உள்ள ஒரு பிரச்சனை உலக சுகாதார ஸ்தாபனம் எப்போது கொவிட் 19 இல்லை என அறிவிக்கின்றதோ அன்றுவரை எமக்கு இந்த கொரானா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படு எனவே, அந்த நிலையிலும்  எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் நாம் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு உள்ளோம். 

அதாவது தனிமைப்படுத்தல் சட்டம் சுகாதார நடைமுறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்களை பின்பற்றி  எதிர்வரும் தேர்தலை நடத்த  முயற்சிக்கின்றோம் 

அதேபோல் தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது எனவே அனைவரின் ஒத்துழைப்போடும் குறிப்பாக பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது அதாவது அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோல் சுகாதாரத் திணைக்களத்தின் சுகாதார நடைமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது எமது கோரிக்கையாக இருக்கிறது அதேபோல் தேர்தல் வன்முறையில் எவர் ஈடுபட்டாலும் அது சட்டத்துக்குரிய குற்றம் ஆகும் எனவே அது எவராக இருந்தாலும் தேர்தல் வன்முறையுடன் சம்பந்தப்பட்டு எமக்கு முறைப்பாடு வழங்கப்படும் இடத்து அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08