இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,701 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கட்கிழமை காலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபர தரவுகளின்படி தற்போது இந்தியாவல் மொத்தமாக 878,254 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 23,174 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் 553,471 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

இதுவரை இந்தியா முழுவதும் 11.8 மில்லியன் பேர் சோதனைக்கு உபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 2,19,103 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,910,357 ஆக காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 569,128 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.