கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 6600 மில்லியன் ரூபா நிதி வடக்கு அபிவிருத்திக்கென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு அபிவிருத்தித்திட்டங்கள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
சுன்னாகத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்தவருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 6600 மில்லியன் ரூபா நிதி வடக்கு அபிவிருத்திக்கென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் வீட்டுத்திட்டங்கள் பாடசாலை, மைதானங்கள் சனசமுக நிலையங்கள் மற்றும் உள்ளூர் வீதிகள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழ்நிலை காணப்பட்டது ஆனால் இன்று அவ்வாறு இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதானால் பல சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மக்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை ஆட்சிபீடம் ஏற ஒத்துழைப்பார்களேயானால் மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய சூழ்நிலை மீண்டும் உருவாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM