மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இன்று மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக்கவசம் அணந்து சமுக இடைவெளி பேணப்பட்டு தபால் மூல வாக்களிப்பை வழங்கினர்.

மட்டக்களிப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை உட்பட மாவட்டத்தின் 14 பிரதேச செயலப்பிரிவுகளிலுமுள்ள சுகாதார வைத்தியதிகாரி பணிமனைகளிலும் வாக்களிப்புகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு பொலிசாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.