தென்னாபிரிக்காவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மது விற்பனை மற்றும் விநியோகத்திற்கு மீண்டும் தடை விதிக்க அந் நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.

கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் அதிக படுக்கைகள் தேவைப்படுகிறது. எனவே மது விற்பனை செய்வதை தடைசெய்யவதன் மூலம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை இந்த குறைக்க முடியும் என அந் நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்ட உரையொன்றில் , 

தென்னாப்பிரிக்கா COVID-19 தொற்றாளர்களின் உச்சத்தை எட்டுவதால், வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறை குறித்து உயர் சுகாதார அதிகாரிகள் எச்சரித்ததாக ரமபோசா கூறினார். 

அத்துடன் சில வைத்தியசாலைகளில் நோயாளிகளின் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியிருப்பதால் அவர்களைத் திருப்பி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.

அதேநேரம் ஜூன் மாதத்தில் மது விற்பனை மற்றும் விநியோகம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வைத்தியசாலைகள் நோயாளர்களின் அவசர சேர்க்கை மற்றும் படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

தென்னாபிரிக்காவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 276,242 ஆகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 4,079 ஆகவும் காணப்படுகிறது.