பாதாள உலகக்குழு தலைவர் அங்கொடை லொக்காவின் நெருங்கிய இரு சகாக்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

முல்லேரியா பகுதியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பிலேயே குறித்த இருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.