உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

காலி, ஹபராதுவ பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் உனவட்டுன ரயில் நிலைய அதிபர் தொடர்புகளை பேணியுள்ளார்.

இதன் பின்னர் ரயில் நிலைய அதிபர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே உனவட்டுன ரயில் நிலையம் இன்று தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. 

அதேவேளை உனவட்டுன ரயில் நிலையத்திற்கான கிருமி நீக்க நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளடன், பதில் ரயில் அதிபரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

காலியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் : தொடர்புகளைப் பேணியோர் தனிமைப்படுத்தலில்