தபால் மூல வாக்களிப்பு இன்று! ராஜாங்கனையில் மறு அறிவித்தல் வரை நிறுத்தம்

Published By: Vishnu

13 Jul, 2020 | 08:13 AM
image

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் இன்று, நாளை மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

தேசிய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, வாக்காளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சல் வாக்குகளை அளிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, தபால்மூல வாக்களிப்பு நிலையங்களில் இருக்கும் சுகாதார சேவைகள் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் அனைவரும் தமது வாக்குகளை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.  

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவையாற்றும் சேவையாளர்கள் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.  

பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சுகாதார பிரிவினர் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.  

இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமெனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

COVID-19 நெருக்கடியைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தாபல் மூல வாக்காளர்கள் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக் கவசத்தை பயன்படுத்தவும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது கைகளைத் தூய்மைப்படுத்தவும், வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க பேனாவை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தபால் மூல வாக்களார்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் தமது சரியான அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அதன்படி, வாக்காளர்கள் ஒரு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை எண்ணைக் கொண்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கிடையில், வாக்குச் சீட்டுகள், தபால் வாக்குச் சாவடிகள் மற்றும் வளாகங்களைக் புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை எடுப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது.

2020 பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு செயல்முறையை அவதானிக்க இரண்டு கண்காணிப்பு அமைப்புகளான பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30