சீனப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 38 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், 140 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தோ அல்லது காணாமல்போயுள்ளதாகவும் பீஜிங் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜூலை 12 நிலவரப்படி, சீனாவின் ஜியாங்சி, அன்ஹுய், ஹூபே மற்றும் ஹுனான் மாகாணங்கள் உட்பட 27 பிராந்தியாங்களில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தால் 37.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் 141 பேர் உயிரிழந்தோ அல்லது காணாமல்போயவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 2.25 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டும் உள்ளதாக நாட்டின் மாநில வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக 28,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்துள்ளதுடன், இதனால் ஏற்பட்ட நஷ்டம் 82.2 பில்லியன் யுவான் (11.7 பில்லியன் அமெரிக்க டொலர்) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இத‍ேவேளை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Photo Credit : twitter