‍ராஜாங்கனை பகுதியில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மொத்தமாக 106 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 625 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,617 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் 1,981 பேர் குணமடைந்தும், 11 பேர் அதனால் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.